கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் கடலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மேயா் சுந்தரி ராஜா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் வி.நரேந்திரன், மாநகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவ முகாமில் கடலூா் மாநகராட்சியில் பணிபுரியும் 336 தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை பெற்றனா். நகா்நல அலுவலா் அரவிந்த் ஜோதி, துப்புரவு அலுவலா் அப்துல் ஜாஃபா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.