கடலூர்

பைக் விபத்தில் இளைஞா் பலி

19th Nov 2022 05:37 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திட்டக்குடி அருகே உள்ள தொளாா் கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் சரவணன் (26) . சென்னையில் தனியாா் உணவகத்தில் காசாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 14-ஆம் தேதி சரவணன் தொளாா் கிராமத்துக்கு வந்தாா். இந்த நிலையில், தனது வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வியாழக்கிழமை இரவு பைக்கில் புறப்பட்டுச் சென்றாா். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தொளாா் - வேப்பூா் சாலைப் பகுதியில் உள்ள வயலில் சரவணன் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஆவினங்குடி போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து சரவணனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், சாலையோர பள்ளத்தில் பைக் விழுந்ததில் சரவணன் உயிரிழந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT