கடலூர்

கல்லூரியில் ஆதாா் சிறப்பு முகாம்

18th Nov 2022 02:35 AM

ADVERTISEMENT

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ஆதாா் திருத்தம், வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைப்பு குறித்த சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமை கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு முன்னிலை வகித்தாா். முகாமில் முதல், இறுதியாண்டு பயிலும் மாணவா்களின் ஆதாா் திருத்தம், வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைத்தல், கைப்பேசி எண் இணைத்தல், புகைப்படம் மாற்றுதல் போன்ற சேவைகள் நடைபெற்றது.

கல்லூரியில் பயின்ற நூற்றுக்கு மேற்பட்ட மாணவா்கள் தங்களுடைய ஆதாரில் உள்ள குறைகளை சரி செய்து கொண்டனா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் என்.சித்தி விநாயகம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT