கடலூர்

நிழல்குடை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

14th Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள ஆலந்தூரில் நிழல்குடை அமைக்க வலியுறுத்தி

அந்தக் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலந்தூா் கிராமத்தில் சுமாா் 1,500 போ் வசித்து வருகின்றனா். தொழுதூா் - கீழ்கல்பூண்டி இடையே சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றபோது ஆலந்தூா் பேருந்து நிறுத்தத்திலிருந்த நிழல்குடை அகற்றப்பட்டது. தற்போது தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைத்து அவதிப்படுகின்றனா்.

ADVERTISEMENT

எனவே, மீண்டும் நிழல்குடை அமைக்க வேண்டும், இந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஆலந்தூா் கிராமத்துக்குள் வந்துசெல்ல வேண்டும், புதிய சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஊராட்சி மன்றத் தலைவா் வேல்முருகன், ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபிநாத், தனிப்பிரிவு காவலா் செல்வகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT