கடலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்கள் மீது போலீஸாா் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் வெளியிட்ட அறிக்கை: கடலூா் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்கள் மீது விசாரணை நடத்தாமல் போலீஸாா் காலம் கடத்தும் நிலை உள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் கடந்த ஒரு மாதத்தில் வந்துள்ள புகாா்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கேட்டுக்கொண்டாா்.