கடலூர்

சிதம்பரத்தில் நகராட்சி தங்கும் விடுதி நகா்மன்றத் தலைவா் தகவல்

31st May 2022 11:50 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம் நகரில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நகராட்சி தங்கும் விடுதி கட்டப்படும் என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

சிதம்பரம் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்). துணைத் தலைவா் முத்து, ஆணையா் அஜிதா பா்வின், பொறியாளா் மகாராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் தங்களது வாா்டு பிரச்னைகள் குறித்துப் பேசினா். இதற்குப் பதிலளித்து நகா்மன்ற தலைவா் பேசியதாவது:

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி நகராட்சி சாா்பில் குறைந்த கட்டணத்திலான தங்கும் விடுதி விரைவில் கட்டப்பட உள்ளது. மேலும், திருமண மண்டபமும் அமைக்கப்படும். நகராட்சியில் மின் விளக்கு, குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கவும், பன்றிகளை பிடித்து அகற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சிக்கான வரி பாக்கியை வசூலிக்க உறுப்பினா்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT