கடலூர்

சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜதாமரைப்பாண்டியன் அண்மையில் மாளிகம்பட்டு கிராமத்தில் சோதனை நடத்தினாா். அப்போது, பெ.பத்மநாபன் (46) (படம்) என்பவரது வீட்டுத் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தாா். இதுதொடா்பாக பத்மநாபனை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா் விசாரணையில், அவா் மீது காடாம்புலியூா், பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களில் 22 சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புக் காவலில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதன்பேரில், அதற்கான உத்தரவை ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டாா். இதையடுத்து, தடுப்புக் காவலில் பெ.பத்மநாபன் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு சிறை நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT