கடலூர்

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க வலியுறுத்தல்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு ஜனநாயக ஜனதா தளம் கட்சித் தலைவா் டி.ராஜகோபால் வலியுறுத்தினாா்.

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூரில் வெள்ளிக்கிழமை அம்பேத்கா் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், காவல் துறை அனுமதி மறுத்ததால் அந்த விழா நிறுத்தப்பட்டது. இதுதொடா்பாக உயா் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும். மாணவா்களின் கல்வி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். திமுக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. அதேநேரத்தில், கடந்த 3 மாதங்களாக கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்டம்- ஒழுங்கை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச் செயலா்கள் சங்கா், ஏழுமலை, மாநிலச் செயலா் சின்னையன், மாவட்டத் தலைவா் சரவணன், பழனி, மாவட்டச் செயலா் செல்வகுமாா், மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT