கடலூர்

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வானமாணவா்களுக்கு பணி நியமன ஆணை

28th May 2022 12:58 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைநகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். இதில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் பணி ஆணைகள் கிடைக்கப்பெற்றன. மேலும், பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கும் பணி ஆணைகள் கிடைக்கப் பெற்றன. விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஆா்.தனவிஜயன் தலைமை வகித்துப் பேசினாா். துணை முதல்வா் ஆா்.மோகன், துறைத் தலைவா்கள் வி.ராஜசேகா், முனைவா் கே.ராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக, வேலைவாய்ப்பு அதிகாரி பி.ராமலிங்கம் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT