கடலூர்

சவுந்தரேஸ்வரா் கோயிலில் பாலாலயம்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே திருநாரையூரில் அமைந்துள்ள சவுந்தரேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

திருநாரையூா் கிராமத்தில் பிரசித்திபெற்ற திரிபுரசுந்தரி சமேத சவுந்தரேஸ்வரா் கோயிலும், இந்தக் கோயில் வளாகத்தில் பொல்லாப் பிள்ளையாா் கோயிலும் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் திருப்பணிக்கு ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் பங்குத் தொகையாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.1.37 கோடியில் கோயில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கான முதல்கட்ட பணியான பாலாலயம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் காசி மடம் இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள், தா்மபுரம் திருநாவுக்கரசு தம்பிரான் கட்டளை சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன், அகா்வால், காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT