கடலூர்

விபத்தில் லாரி ஓட்டுநா் பலி

27th May 2022 09:32 PM

ADVERTISEMENT

கடலூரில் வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கணபதி (33). லாரி ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு கடலூா் முதுநகா் சிப்காட்டில் உள்ள தனியாா் ஆலைக்குச் சென்றுகொண்டிருந்தாா். கடலூா் - சிதம்பரம் சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கணபதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT