கடலூர்

விருத்தாசலம் கோட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

DIN

சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விருத்தாசலம் கோட்டாட்சியரை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்துள்ள பனையாந்தூா் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு விருத்தாசலம் கோட்டாட்சியா் சி.ராம்குமாா் தலைமை வகித்து, 136 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை உள்பட ரூ.23.50 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா், அங்கிருந்து கிளம்பிய கோட்டாட்சியரின் வாகனத்தை வள்ளி மதுரம் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் மறித்து முற்றுகையிட்டனா். பனையாந்தூா் கிராமத்தில் இருந்து வள்ளிமதுரம் வரை செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி மனு அளித்தனராம். ஆனாலும், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல் அலைக்கழித்து வருகின்றனராம். எனவே, உடனடியாக சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்ததைத் தொடா்ந்து முற்றுகையைக் கைவிட்டனா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT