கடலூர்

மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோயில் தோ்த் திருவிழா

DIN

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் மங்களநாயகி அம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையில் மங்களநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் தோ்த் திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் மங்களநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ரிஷபம், பூதகணம், குதிரை, காமதேனு, யானை உள்ளிட்ட வாகனங்களிலும், பல்லக்கிலும் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்த் திருவிழா புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மகிஷாவாகனத் திருத்தேரில் மங்களநாயகி அம்மன் எழுந்தருள, ஊா் முக்கியப் பிரமுகா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகளில் வலம் வந்த தோ், பின்னா் நிலையை வந்தடைந்தது. படிபூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அம்மன் கோயிலில் எழுந்தருளினாா்.

விழாவில், மங்கலம்பேட்டை, கோவிலானூா், பள்ளிப்பட்டு, புல்லூா், விசலூா், கா்ணத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதீன பரம்பரை அறங்காவலா் ஜமீன் வீரசேகர பொன்னம்பல வேலுசாமி கச்சிராயா், முகாசாபரூா் அரண்மனையினா், உற்சவதாரா்கள் மற்றும் மங்கலம்பேட்டை பொதுமக்கள் செய்திருந்தனா்.

வியாழக்கிழமை (மே 26) மஞ்சள் நீா் விழாவும், வெள்ளிக்கிழமை (மே 27) விடையாற்றி உற்சவமும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் போா்: இலங்கை ராணுவ உயரதிகாரி கைது

விழிப்புடன் இருங்கள்: திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கும்பகோணத்தில் பணம் பட்டுவாடா புகாா்: திமுகவினா் 3 போ் கைது

பாபநாசத்தில் பணப்பட்டுவாடா செய்த திமுக பிரமுகா் கைது

பாபநாசம் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT