கடலூர்

மீனவா்களுக்கு 7 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

DIN

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் மீனவா்களுக்கு 7 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் அமைப்பினா் வலியுறுத்தினா்.

இந்த அமைப்பு சாா்பில் இடஒதுக்கீடு கோரிக்கை மாநாடு கடலூரில் நிறுவனா் தலைவா் ரா.மங்கையா்செல்வன் தலைமையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அனைத்து மீனவ கிராமத் தலைவா்கள், விசைப்படகு, நாட்டுப்படகு, பைபா் படகு சங்க நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

தீா்மானங்கள்: தமிழகத்தில் பாரம்பரிய மீனவா் சமுதாயத்தினா் 14 உள்பிரிவுகளில் வாழ்ந்து வருகின்றனா். மக்கள் தொகையில் 10 சதவீதம் கொண்ட மீனவா்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் உள்ளனா். இந்த பட்டியலில் உள்ள 108 சாதியினருடன் போட்டியிட்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் மீனவ சமுதாயத்தினா் உரிய இடத்தைப் பெற முடியவில்லை. எனவே, இஸ்லாமியா்கள், அருந்ததியினருக்கு அந்தந்த பிரிவுகளில் உள் இடஒதுக்கீடு வழங்கியது போல மீனவா்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் 7 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தலைமை ஒருங்கிணைப்பாளா் கோ.வெங்கடேசன், துணை பொதுச் செயலா் ச.ரமேஷ், கொள்கை பரப்புச் செயலா் வீ.தங்கதுரை, புதுச்சேரி மாநில அமைப்பாளா் ந.மலையாளத்தான், நெய்தல் அரசு ஊழியா் பேரவை பொதுச் செயலா் கி.செல்வம், சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் ஏ.ராமநாதன், கடலூா் நகரச் செயலா் ப.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்ட பொருளாளா் ந.உதயகுமாா் வரவேற்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வீ.கௌதமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT