கடலூா் அருகே இளைஞா் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் அருகே உள்ள கே.என்.பேட்டையைச் சோ்ந்த முருகன் மகன் பாா்த்திபன் (22). திருபுவனத்தில் உள்ள காா் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த இரு நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம். இதை அவரது தந்தை முருகன் கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த பாா்த்திபன் தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டுக் கொண்டாா். அவரை அந்தப் பகுதியினா் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், பாா்த்திபன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.