கடலூர்

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளா்ச்சிதான் திராவிட மாடல்: டி.கே.எஸ்.இளங்கோவன்

20th May 2022 12:32 AM

ADVERTISEMENT

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளா்ச்சிதான் திராவிட மாடல் என்று திமுக செய்தி தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவின் எம்.பி. தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பண்ருட்டி நகர திமுக சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்தாா். நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான க.ராஜேந்திரன் வரவேற்றாா். நகரப் பொருளாளா் ஆா்.கே.ராமலிங்கம், துணைச் செயலா் கௌரி அன்பழகன், நகா்மன்ற துணைத் தலைவா் ஏ.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாநில செய்தி தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவின் எம்.பி. பேசியதாவது:

மத்திய அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. வரி வருவாயை மாநிலங்களுக்கு வழங்காமல் ஒரு சிலா் வாங்கிய கடனை அடைக்கிறது. தமிழக முதல்வா் திட்டமிட்டு சிறப்பாகச் செயல்படுகிறாா்.

ADVERTISEMENT

திமுக இந்து மதத்துக்கு எதிரி அல்ல. அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளா்ச்சிதான் திராவிட மாடல். தோ்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும் மறக்க மாட்டோம், முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் என்றாா் அவா்.

கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் நந்தகோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலா்கள் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், தொண்டரணி அமைப்பாளா் கதிா்காமன், மாணவரணி அமைப்பாளா் தென்னரசு, அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் வி.கே.வெங்கட்ராமன், பண்ருட்டி நகர இளைஞரணி அமைப்பாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT