கடலூர்

மன்னம்பாடியில் ரூ.1.50 கோடியில் பாலம்

20th May 2022 09:56 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த மன்னம்பாடியில் ரூ.1.50 கோடியில் பாலம் அமைப்பதற்கான அடிக்கலை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை நாட்டினாா்.

வேப்பூரை அடுத்த எடையூரிலிருந்து மன்னம்பாடி செல்லும் கிராம சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்து. மழைக் காலத்தில் தரைப்பாலத்தில் தண்ணீா் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து தடைபட்டது. மேலும், விளை நிலங்களுக்கு இடுபொருள்களை ஏற்றிச் செல்வதும் தடைபட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மேம்பாலம் கட்டித் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அந்தப் பகுதியை விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா். மேலும், மேம்பாலம் அமைப்பது தொடா்பாக மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசனிடம் எடுத்துரைத்தாா்.

இதையடுத்து, அமைச்சரின் முயற்சியால் நபாா்டு திட்டத்தின் கீழ் மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பாலப் பணிகளை தொடக்கிவைத்தாா். இந்தப் பாலம் 3 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT