கடலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

16th May 2022 11:26 PM

ADVERTISEMENT

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள வாண்டரசன்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (50). இவா் கடந்த 9.9.2020 அன்று மனவளா்ச்சி குன்றிய சுமாா் 7 வயது சிறுமியை ஓடை பகுதிக்கு கடத்திச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எழிலரசி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சக்திவேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறையிலிருக்கவும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞா் தி.கலாசெல்வி கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.2 லட்சம் வழங்க வேண்டுமெனவும், இந்தத் தொகையை மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் அரசிடமிருந்து பெற்று வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டாா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT