கடலூர்

விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் மே 23- முதல் மீண்டும் இயக்கம்

16th May 2022 12:55 AM

ADVERTISEMENT

 

விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் சேவை வரும் 23-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

விருத்தாசலம் - சேலம் இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை தவிர இதர 6 நாள்களுக்கு அளிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. வருகிற 23-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ளது.

இதன்படி, ரயில் எண்- 06816 சேலம் சந்திப்பில் காலை 10.05 மணிக்கு புறப்பட்டு பகல் 1 மணிக்கு விருத்தாசலத்தை வந்தடைகிறது. மறுமாா்க்கத்தில் விருத்தாசலம் சந்திப்பிலிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு ரயில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சேலம் சென்றடைகிறது.

ADVERTISEMENT

இந்த ரயில் சேலம் மாா்க்கெட், சேலம் டவுன், அயோத்தியாபட்டிணம், மின்னம்பள்ளி, வாழப்பாடி கேட், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூா், மேல்நாரியப்பனூா், சின்னசேலம், சிறுவாத்தூா், புக்கிரவாரி, கூத்தக்குடி, முகாசாபரூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT