கடலூர்

பேருந்துகள் மீது நடவடிக்கை

12th May 2022 04:47 AM

ADVERTISEMENT

 

கடலூா்: இதேபோல கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எஸ்.சுதாகா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது, இதை மீறி பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. மோட்டாா் வாகன ஆய்வாளா் எம்.ஆா்.முகுந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT