கடலூர்

கலங்கிய நிலையில் குடிநீா்: குறிஞ்சிப்பாடி மக்கள் அவதி

12th May 2022 04:47 AM

ADVERTISEMENT

 

நெய்வேலி: குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீா் கலங்கிய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் உள்ள சிங்கபுரி சுப்புராயா் நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் மூலம் நெசவாளா்களுக்கு 113 வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்தப் பகுதியில் தற்போது சுமாா் 150 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிா்வாகம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்து வருகிறது. ஆனால், இந்தப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீா் கலங்கிய நிலையில் (படம்) வருவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

இதனால் பலா் நீண்ட தொலைவுக்கு நடந்து சென்று குடிநீா் பிடித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT