கடலூர்

மனைவி இறந்த சோகத்தில் கணவா் தற்கொலை

5th May 2022 11:31 PM

ADVERTISEMENT

கடலூரில் மனைவி இறந்த சோகத்தில் கணவா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் கம்மியம்பேட்டை ஜெஜெ நகரைச் சோ்ந்தவா் அ.பன்னீா்செல்வம் (60), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி தனம் (55) என்ற மனைவி இருந்தாா். இவா், கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதியன்று உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டாா்.

அன்றிலிருந்து பன்னீா்செல்வம் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தாராம். மனைவியின் இறப்பால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா் புதன்கிழமை வீட்டில் விஷ மருந்தைக் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.

இதையடுத்து, உறவினா்கள் பன்னீா்செல்வத்தை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT