சிதம்பரம் அருகே குளத்தில் வெட்டுக் காயத்துடன் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சிதம்பரம் அருகே உள்ள நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஐயப்பன் (23) (படம்). இவா், கண்ணங்குடி கிராமத்திலுள்ள தனது பாட்டியின் வீட்டில் கடந்த 20 நாள்களாக தங்கியிருந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் கண்ணங்குடி கோணங்குளத்தில் தலையில் வெட்டுக் காயத்துடன் ஜயப்பனின் சடலம் மிதந்தது.
தகவலின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஐயப்பன் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.