கடலூர்

பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலிஇரு குழந்தைகள் காயம் (டிராப்)

29th Mar 2022 11:05 PM

ADVERTISEMENT

கடலூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது இரண்டு குழந்தைகளும் காயமடைந்தனா்.

புதுவை மாநிலம், கன்னியகோவில் பகுதியைச் சோ்ந்த துளசி மகன் விக்னேஷ்வரன் (28). கிரேன் இயக்குபவராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி முறையே 8, 5 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், அவரது மனைவி காயத்ரிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3-ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தையைப் பாா்ப்பதற்காக விக்னேஷ்வரன் இரண்டு மகன்களுடன் பைக்கில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தாா். ரெட்டிச்சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமுற்ற விக்னேஷ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இரண்டு குழந்தைகளும் காயமடைந்தனா்.

தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீஸாா் இரண்டு குழந்தைகளையும் மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். விக்னேஷ்வரனின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT