கடலூர்

பண்ருட்டி அருகே குளத்தில் மூழ்கி இருவா் பலி

29th Mar 2022 11:02 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குளத்தில் குளித்த விவசாயிகள் இருவா் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

பண்ருட்டி வட்டம், கருக்கை கிராமத்தைச் சோ்ந்த சந்தானம் மகன் ரத்தினவேல் (45). அதே கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் திருநாவுக்கரசு (40). விவசாயிகளான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை கருக்கை கிராமத்தில் உள்ள சாமியாா் குளத்தில் குளித்தனா். அப்போது, இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இதுகுறித்த தகவலறிந்த காடாம்புலியூா் போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT