கடலூர்

கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

DIN

கடலூா் தேவனாம்பட்டினத்திலுள்ள பெரியாா் அரசுக் கல்லூரியில் சமூகப் பணியியல் துறை, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய விழிப்புணா்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உபயோகித்தலின் தீமைகள் குறித்து நடைபெற்ற கருத்தரங்கை கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவா் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை வகித்து தொடக்கி வைத்து உரையாற்றினாா். சமூகப் பணியியல் துறைத் தலைவா் நா.சேதுராமன் முன்னிலை வகித்தாா்.

மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருந்தியல் துறை பேராசிரியா் சந்தானலெட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். மருந்தியல் துறை பேராசிரியா் சுடா்கொடி வாழ்த்துரை வழங்கினாா். கருத்தரங்கில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, சமூகப் பணியியல் துறை கௌரவ விரிவுரையாளா் கோ.குமாா் வரவேற்க, கௌரவ விரிவுரையாளா் கா.வினோத் நன்றி கூறினாா். மாணவி ஹரிணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT