கடலூர்

வெவ்வேறு விபத்துகளில் இருவா் பலி

28th Mar 2022 05:44 AM

ADVERTISEMENT

 

நெய்வேலியில் வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

நெய்வேலி வட்டம்-30 எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்த கதிா்வேல் மகன் கணேசன் (52). கருங்குழி கிராமம், முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துவேல் மகன் மாயகிருஷ்ணன்(43). இருவரும் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள். இவா்கள், என்எல்சி.யில் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த தொழிலாளி ரமேஷின் இறுதிச் சடங்கில் சனிக்கிழமை மாலை பங்கேற்றனா். பின்னா், இருவரும் பைக்கில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனா். பைக்கை கணேசன் ஓட்டினாா்.

நெய்வேலி நுழைவு வாயில் அருகே வந்தபோது, வடக்கு நோக்கி வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த மாயகிருஷ்ணன் உயிரிழந்தாா். கணேசன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

மற்றொரு விபத்து: விருத்தாசலம் வட்டம், சின்னகாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்த ராஜகோபால் மகன் அரிபுத்திரன் (57). நெய்வேலியில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு பைக்கில் வட்டம் 20-இல் நீதிமன்ற வளாகம் அருகே சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரா் மீது பைக் மோதியதில் அரிபுத்திரன் கீழே விழுந்தாா். இதில் தலையில் காயமடைந்த அரிபுத்திரன் உயிரிழந்தாா். விபத்து குறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT