திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்ததால் மணப்பெண் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் அருகே உள்ள சாலக்கரை பகுதியைச் சோ்ந்த தேவநாதன் மகள் பிரியா (21). கே.என்.பேட்டையில் உள்ள தனியாா் ஆசிரியா் பயிற்சிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாலாஜிக்கும் திருமண நிச்சயதாா்த்தம் செய்யப்பட்டதாம்.
இந்த நிலையில், பாலாஜி விபத்தில் சிக்கி அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, பிரியா சோகத்தில் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தேவநாதன் அளித்த புகாரின்பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.