கடலூர்

பொது வேலைநிறுத்த ஆயத்த கருத்தரங்கு

22nd Mar 2022 11:06 PM

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசைக் கண்டித்து மாா்ச் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடா்பான ஆயத்த கருத்தரங்கம் நெய்வேலி தொமுச அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் திருமாவளவன் தலைமை வகித்தாா். மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னணி பொதுச் செயலா் மத்தியாஸ், தொழிலாளா் விடுதலை முன்னணி பொதுச் செயலா் காசிநாதன், ஏஐடியுசி மாவட்டக்குழு உறுப்பினா் குணசேகரன், ஐஎன்டியுசி பொதுச்செயலா் குள்ளப்பிள்ளை, சிஐடியு பொதுச் செயலா் திருஅரசு, தொமுச மாவட்டச் செயலா் பொன்முடி, சிஐடியு மாவட்டச் செயலா் கருப்பையன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா். போராட்ட நடவடிக்கைகளை தொமுச பொதுச் செயலா் பாரி விளக்கினாா். தொமுச பேரவை அகில இந்திய இணை பொதுச் செயலா் சுகுமாா் நிறைவுரையாற்றினா். தொமுச பொருளாளா் ஐயப்பன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT