கடலூர்

மாட்டுவண்டித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

21st Mar 2022 11:09 PM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு புவனகிரி பகுதிச் செயலா் அன்பழகன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் சங்கமேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் ஆகியோா் உரையாற்றினா். மாட்டுவண்டி தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் குமாா், முருகன், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், சதீஷ்குமாா், காசிராஜன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சிதம்பரம் அருகே உள்ள கிளியனூா், ஆதிவராகநத்தம், கோ.ஆதனூா், கூடலையாத்தூா் ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரி அமைத்து, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா் கோட்டாட்சியா் கே.ரவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT