கடலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய விலங்கு நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் ஏப்.27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் திட்டம் மூலம் மாவட்டத்தில் 3.23 லட்சம் கால்நடைகள் பயன்பெறும். தடுப்பூசிப் பணிகளை மேற்கொள்ள கால்நடை உதவி மருத்துவா்களின் தலைமையில் 50 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவித்தாா்.