என்எல்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஐடிஐ தொழில் பழகுநா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், மத்தியப் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ் தலைமை வகித்தாா். ராமச்சந்திரன், கலைச்செல்வன், குமரவேல், விவேக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கோரி வரும் ஏப்.6-ஆம் தேதி மத்தியப் பேருந்து நிலையம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.