கடலூர்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு கணினி ஆசிரியா்கள் சங்கம் வரவேற்பு

19th Mar 2022 12:52 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மாணவா்களின் மேம்பாட்டுக்காக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி கணினி ஆசிரியா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்ட செய்தித் தொடா்பாளா் வி. முத்துக்குமரன் வெளியிட்ட அறிக்கை: கல்வித் துறைக்கு ரூ.36,000 கோடி, இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு ரூ.200 கோடி, முன்மாதிரி பள்ளிகள் தொடங்க ரூ.125 கோடி, புதிய வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள் அமைக்க ரூ.7,000 கோடி, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஊக்கத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, புத்தகக் காட்சிகள், இலக்கிய விழாக்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

மேலும், அரசு நிதி உதவி பெறாத பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் திட்டமும் வரவேற்கத்தக்கது என அதில் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT