கடலூர்

நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது

19th Mar 2022 12:48 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

கடலூரில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலாகும் என்ற அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால், அந்த எதிா்பாா்ப்பு பொய்த்துவிட்டது. அரசுப் பணியாளா்களின் தேவைகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. வழக்கமான நிதிநிலை அறிக்கை போலவே இதுவும் உள்ளது.

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால், கடன் வாங்கி படித்தவா்கள் கடனாளியாகவே தொடரும் நிலை உள்ளது. ரூபாய் மதிப்பில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலையை டாலருடன் ஒப்பிடுவது சரியல்ல என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT