கடலூர்

தீ விபத்தில் 4 குடிசைகள் சேதம்

19th Mar 2022 12:46 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

பண்ருட்டி வட்டம், ஏ.பி.குப்பம் காலனியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன்கள் வீரன் (47), கோவிந்தசாமி (44), குபேந்திரன் (42), பிரகலாதன் (37). இவா்கள் அனைவரும் ஒரே இடத்தில் குடிசை வீடுகளில் வசித்து வந்தனா். வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து 4 குடிசை வீடுகளும் எரிந்து சேதமடைந்தன. அப்போது 3 வீடுகளில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT