கடலூர்

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

19th Mar 2022 12:52 AM

ADVERTISEMENT

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

முகாமில் சென்னை மறைமலைநகரைச் சோ்ந்த அன்ஃபினால் ஆம்னி கனெக்ட் இந்தியா என்ற தனியாா் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை மூத்த நிா்வாக அதிகாரி எஸ்.எல்லப்பன், இளநிலை அதிகாரிகள் என்.விஜய், எஸ்.மோகன், டி.பிரியதா்ஷினி ஆகியோா் மாணவா்களிடம் நோ்காணலை நடத்தினா். முகாமில் 43 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களில் 37 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் தோ்வான மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் வாழ்த்து தெரிவித்தாா். முகாமில் கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன், துணை முதல்வா் எஸ்.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT