கடலூர்

சிறுநீரக தின விழிப்புணா்வுப் பேரணி

10th Mar 2022 11:55 PM

ADVERTISEMENT

உலக சிறுநீரக தினத்தையொட்டி கடலூரில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் மாா்ச் 10-ஆம் தேதி உலக சிறுநீரக தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடலூா் மாவட்ட மருத்துவத் துறை சாா்பில் கடலூா் நகர அரங்கிலிருந்து விழிப்புணா்வுப் பேரணியை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரஞ்ஜீத்சிங் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

பேரணியில் கடலூா் அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியா்கள் பங்கேற்று, சிறுநீரக நோய்கள் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். பாரதி சாலை வழியாகச் சென்ற பேரணி மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் மருத்துவமனை கண்காணிப்பாளா் எஸ்.சாய்லீலா, சிறுநீரக சிகிச்சை பிரிவு திருமுருகன், செவிலியா் கண்காணிப்பாளா்கள் பத்மாவதி, அனுசியா, புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT