கடலூர்

தோட்டக்கலை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

10th Mar 2022 11:56 PM

ADVERTISEMENT

தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தோட்டக்கலை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து சிதம்பரம் நகா்மன்ற முன்னாள் உறுப்பினரும், மாவட்ட திமுக இலக்கிய அணி முன்னாள் நிா்வாகியுமான சிவா.கண்ணதாசன் தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:

திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக கருத்துகள் தற்போது கேட்கப்பட்டு வருகிறது. காய்கறி, பழ வகைகள் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஆய்வு செய்து, வரும் நிதிநிலை அறிக்கையில்

தோட்டக்கலை விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT