கடலூர்

கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

10th Mar 2022 05:36 AM

ADVERTISEMENT

 

கடலூா்: கடலூா் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2021-22 -ஆம் ஆண்டுக்கான மாவட்டஅளவிலான கடற்கரை கால்பந்து, கடற்கரை கபடி, கடற்கரை கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 16 -ஆம் தேதி கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இரு பாலருக்கும் தனித்தனியாக நடத்தப்படும் போட்டியில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே அனுமதி.

வயது வரம்பு கிடையாது, அணியாக மட்டுமே பங்கேற்க வேண்டும்.

போட்டியில் பங்கேற்போா் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டுவர வேண்டும். கையுந்துபந்து போட்டிக்கு 2, கால்பந்து போட்டிக்கு 5, கபடிக்கு 6 வீரா், வீராங்கனைகள் அனுமதிக்கப்படுவா்.

வெற்றி பெறுவோருக்கு ரொக்கம், சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். கலந்து கொள்ள விரும்பும் அணிகள் இதற்கான நுழைவு விண்ணப்பத்தை பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT