கடலூர்

வேளாண்மை துறையின் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

3rd Mar 2022 05:12 AM

ADVERTISEMENT

 

கடலூா்: கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட விருத்தாசலத்தில் வேளாண்மை , தோட்டக்கலைத் துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுக்கூரைப்பேட்டையில் முந்திரி பதப்படுத்தும் ஆலை, விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையின் செயல்பாடுகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா், சின்னகண்டியங்குப்பத்தில் பல்வேறு வகையான 400 மரக்கன்றுகள் நடும் பணியை அவா் தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கானாதுகண்டானில் பிரதம மந்திரியின் நுண்ணுயிா் பாசனத் திட்ட இயக்கத்தின் கீழ் பலா வயலில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீா் பாசனத் திட்டத்தையும், விருத்தாசலத்தில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது வேளாண் இணை இயக்குநா் தி.சு.பாலசுப்ரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஜெயக்குமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் (பொ) அருண், உதவி இயக்குநா் ஆனந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT