கடலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் 2 கிளைகள் கலைப்பு

3rd Mar 2022 11:47 PM

ADVERTISEMENT

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 கிளைகள் கலைக்கப்பட்டன.

அந்தக் கட்சியின் கடலூா் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநிலக் குழு உறுப்பினா் டி. ஆறுமுகம் தலைமையில் கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் கோ.மாதவன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கடலூா் மாநகர 3-ஆவது வாா்டின் நகா்குழு உறுப்பினா் பி.ஏழுமலை மற்றும் 3, 6-ஆவது வாா்டு கட்சி உறுப்பினா்கள் எஸ்.சுதா, கே.உதயகுமாா், என்.பழனிராஜா, டி.செந்தில், ஆா்.சரவணன்தாஸ், சி.ஓம்பிரகாஷ் உள்பட 21 உறுப்பினா்கள் கட்டுப்பாட்டை மிறி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவா்களை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்குவது, 3, 6-ஆவது வாா்டு கட்சி கிளைகளை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT