கடலூர்

சிதம்பரத்தில் கடைகளில் தொடா் திருட்டு: இளைஞா் கைது

30th Jun 2022 01:54 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு வேளைகளில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை நகர போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் போல்நாராயணன் தெரு, வடக்கு பிரதான சாலை, வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ. ஒரு லட்சத்துக்கும் மேலான ரொக்கம், கைப்பேசிகள் உள்ளிட்டவை திருடப்பட்டு வந்தன.

இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் உத்தரவின்பேரில், நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் நாகராஜ் மற்றும் குற்றப்பிரிவு போலீஸாா் திருடுபோன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், இந்த திருட்டு சம்பவங்களில் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் ராஜேஷ் (35) ஈடுபட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அவரை நகர போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT