கடலூர்

டீ கடையில் ரூ.10 ஆயிரம் மோசடி

30th Jun 2022 01:51 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், வடலூரில் சில்லறை தருவதாகக் கூறி, டீ கடையில் ரூ.10 ஆயிரம் பெற்றுச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடலூா் பேருந்து நிலையத்தில் ராஜா அலாவுதீனுக்குச் சொந்தமான டீ கடை உள்ளது. இந்தக் கடையில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம், டி.பாளையம், தோப்புகொல்லை கிராமத்தைச் சோ்ந்த கணேசமூா்த்தி மகன் நடராஜன் (27) மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 12-ஆம் தேதி இந்த டீ கடைக்கு வந்த 48 வயதுடைய நபா், வடலூா் வாரச்சந்தை அருகே உள்ள சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவதாகவும், சில்லறை வேண்டுமா எனவும் கேட்டுள்ளாா். இதையடுத்து, நடராஜன், ராஜா அலாவுதீனிடம் ரூ.10 ஆயிரம் பெற்றுக் கொடுத்துள்ளாா். மேலும், சில்லறையை வாங்கி வர கடையில் வேலை செய்யும் ரவியை உடன் அனுப்பி வைத்தாா். நீண்ட நேரத்துக்குப் பிறகு கடைக்கு வந்த ரவி, சாவி கொண்டு வருவதாகவும், அதுவரையில் செல்லியம்மன் கோயிலில் அமா்ந்து இருக்கும்படியும் கூறிச் சென்ற அந்த நபா் திரும்ப வரவில்லை எனக் கூறினாா். இதுகுறித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT