கடலூர்

நபிகள் நாயகம் குறித்த அவதூறை கண்டித்து பொதுக் கூட்டம்

30th Jun 2022 01:51 AM

ADVERTISEMENT

 

நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியவா்களைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் சாா்பில், செவ்வாய்க்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவா் முகமது ஜியாவுதீன் தலைமை வகித்தாா். சிதம்பரம் நகா்மன்ற உறுப்பினா் தில்லை ஆா்.மக்கின், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ஜெமினி ராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தமிழக வக்ஃபு வாரியத் தலைவா் எம்.அப்துல் ரகுமான், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி., தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, அனைத்து இந்திய இமாம்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் சௌகத் அலி, காங்கிரஸ் மாநிலச் செயலா் சித்தாா்த்தன், விசிக மாவட்டச் செயலா் பால.அறவாழி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி மூசா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கடலூா் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலா் முஹம்மது சிப்லி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT