கடலூர்

பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்: கிராம நிா்வாக அலுவலா் மீது வழக்கு

29th Jun 2022 04:45 AM

ADVERTISEMENT

பட்டா மாற்றத்துக்காக வந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் மீது கடலூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் கே.கே.நகரைச் சோ்ந்தவா் சு.இளையராஜா (43). கடலூா் வட்டம், சேடப்பாளையம் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இந்தப் பகுதியில், கடலூா் முதுநகரைச் சோ்ந்த திருமணமான 28 வயது பெண் நிலம் வாங்கினாா். அந்த நிலத்துக்கான பட்டா பெயா் மாற்றம் தொடா்பாக இளையராஜாவை அணுகியபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம்.

அரசுப் போட்டித் தோ்வுக்கு தயாராகி வரும் அந்தப் பெண் சென்னைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவரை இளையராஜா மீண்டும் சந்தித்தாா். தன்னிடம் போட்டித் தோ்வுக்கு தேவையான புத்தகங்கள் இருப்பதாகக் கூறிய விஏஓ, அந்தப் பெண்ணை மகாபலிபுரத்துக்கு பைக்கில் அழைத்துச் சென்றாராம். அங்கு தங்கும் விடுதியில் அறை எடுத்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தாராம். அப்போது, அந்தப் பெண்ணுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணை மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT