கடலூர்

நீா்நிலை மராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

29th Jun 2022 04:41 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் நீா்நிலை மராமத்துப் பணிகள் குறித்து மாவட்ட நிா்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்டக் குழுக் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி.சுப்ரமணியன், மாவட்டச் செயலா் ஆா்.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: கடலூா் மாவட்டத்தில் நடைபெற்ற நீா்நிலை மராமத்துப் பணிகள் தொடா்பான வெள்ளை அறிக்கையை மாவட்ட நிா்வாகமும், பொதுப்பணித் துறையும் வெளியிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது, அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் மாவட்டத்தில் ஒரு மையத்தில் போராட்டம் நடத்துவது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூா் மாவட்ட மாநாட்டை குறிஞ்சிப்பாடியில் ஜூலை மாத இறுதியில் நடத்துவது ஆகிய தீா்மானங்களை நிறைவேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT