கடலூர்

மனுநீதி நாள் முகாமில் நல உதவி

29th Jun 2022 04:40 AM

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கீழூா் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை வகித்த நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன், 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் ஓய்வூதியம், வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.14,17,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கடலூா் கோட்டாட்சியா் அதியமான் கவியரசு முன்னிலை வகித்தாா். குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். வட்டார மருத்துவ அலுவலா் அகிலா, தோட்டக்கலை உதவி இயக்குநா் சங்கீதா, வேளாண்மை அலுவலா் அனுசுயா, துணை வட்டாட்சியா்கள் சந்திரசேகா், ஸ்ரீதா், வடக்குத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சடையப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வட்ட வழங்கல் அலுவலா் ரோகிணிராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT