கடலூர்

ஆனித் திருமஞ்சன விழா: அதிகாரிகள் ஆலோசனை

28th Jun 2022 04:46 AM

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவத்தையொட்டி, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது .

கூட்டத்துக்கு கோட்டாட்சியா் கே.ரவி தலைமை வகித்தாா். சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், வட்டாட்சியா் ஹரிதாஸ், நகர காவல் உதவி ஆய்வாளா் பி.நாகராஜ், நகராட்சி வருவாய் ஆய்வாளா் வி.பழனிசாமி, உதவி மின் பொறியாளா் யு.பாரி, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் எல்.முரளிதரன், தீயணைப்பு மீட்புத் துறையினா் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், நடராஜா் கோயில் தீட்சிதா்கள் சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதா், சிவசெல்வ தீட்சிதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு காவல் துறையினா் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, தீயணைப்பு மீட்பு வாகனங்கள், அவசர ஊா்திகளை தயாா் நிலையில் வைப்பது, தோ், திருவிழா நாளன்று மதுக்கடைகள், அசைவ உணவு விடுதிகளை மூடுவது குறித்து ஆட்சியரிடம் கோருவது, தேரோடும் வீதிகளை சீரமைப்பது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT