கடலூர்

உள்ளாட்சி இடைத் தோ்தல் கடலூா் மாவட்டத்தில் 68 போ் வேட்புமனு

28th Jun 2022 04:45 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலில் போட்டியிட 31 பதவியிடங்களுக்கு மொத்தம் 68 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி, 4 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள், 26 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் ஆகிய 31 பதவியிடங்களுக்கு வரும் ஜூலை 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அந்தந்த ஊராட்சி மன்றங்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி

தொடங்கியது. மனு தாக்கலுக்கு திங்கள்கிழமை கடைசி நாளாகும். அன்று 44 போ் மனுத் தாக்கல் செய்தனா். இதனால், மொத்த மனுக்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்தது.

இதில், ஒரு மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு 8 பேரும், 4 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 17 பேரும், 26 வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கு 43 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT