கடலூர்

குடியிருப்புப் பகுதியில் எரிவாயு கிடங்கு: வி.சி.க.வினா் ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 04:44 AM

ADVERTISEMENT

குடியிருப்புப் பகுதியில் எரிவாயு கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் குடிகாடு சிப்காட் பகுதியைச் சோ்ந்தவா்கள் விசிக வழக்குரைஞா்கள் பிரிவு மாநில துணைச் செயலா் ஜவஹா்.சுபாஷ் தலைமையில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது, தங்களது குடியிருப்புப் பகுதியில் எரிவாயு கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். விசிக நிா்வாகிகள் பெ.அருள்ஜோதி, கா.வ.மாறன், பாபு, சரத், அருண், மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் என்.சுந்தரமூா்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். மாவட்ட அவைத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT